Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவாவுக்கு பிடித்த நடிகர் விஜய்!

12 செப், 2014 - 12:19 IST
எழுத்தின் அளவு:

பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு பிரபுதேவா. நடன மாஸ்டராக பணியாற்றி வந்த இவர், ஜெனடில்மேன் படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, வால்டர் வெற்றிவேல் படத்தில் சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது என சில படங்களில் இடமபெற்ற பாடல்களில் நடனமாடினார். அவரது வித்தியாசமான நடன அசைவுகள் ரசிகர்களை கவர்ந்ததால், ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் ஹீரோவாகி விட்டார் பிரபுதேவா.

அதையடுத்து, தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது ஹீரோ மார்க்கெட் கவிழ்கிறது என்பதை அறிந்ததும் டைரக்ஷனுக்கு தாவினார். தனது தாய்மொழியான தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி விட்டு பின்னர் தமிழிலும் படங்கள் இயக்கி வெற்றி கண்ட பிரபுதேவா இப்போது பாலிவுட்டின் முக்கிய கமர்சியல் இயக்குனராகி விட்டார்.


தற்போது தான் தெலுங்கில் இயக்கிய தூக்குடு என்ற படத்தை இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அஜய்தேவ்கான், சோனாக்ஷி சின்ஹா அப்படத்தில் நடித்துள்ளனர். சோனாக்க்ஷி சின்ஹா பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் 3வது படம் இது.


இந்த நிலையில், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, நல்ல கதை அமையும்போது மீண்டும் தமிழில் படங்களை இயக்குவேன் என்று சொன்ன அவரிடத்தில், தென்னிந்திய அளவில் உங்களுக்கு பிடித்தமான ஹீரோ யார்? என்று கேட்டகப்பட்டது.


அதற்கு அவர், எனக்கு பிடித்த நடிகர் விஜய்தான். காரணம் அவர்தான் தென்னிந்திய அளவில் சிறப்பாக நடனமாடக் கூடியவர். அதன் காரணமாகவே எனக்கு விஜய்யை அதிகமாக பிடிக்கும் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)