சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல விளம்பர பட நடிகை மனீஷா ஸ்ரீ. தொடர்ந்து டி.வி பார்ப்பவர்களுக்கு மனீஷா ஸ்ரீ நல்ல அறிமுகமானவராக இருப்பார். இதுவரை 700 விளம்பர படங்களில் நடித்திருக்கும் மனீஷா ஸ்ரீ, இருக்கு ஆனா இல்ல படத்தின் மூலம் அறிமுகமானார். படம் நன்றாக போகவில்லை என்றாலும் மனீஷாவுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
"சிறுவயதில் அப்பா அம்மாவுக்கு பயந்து காய்ச்சல் அடிப்பது மாதிரி வயிறு வலிப்பது மாதிரி நடிக்க ஆரம்பித்தது கடைசியில் நடிப்பே முழுநேர தொழிலாகி விட்டது. பூர்வீகம் ஜெய்ப்பூர் என்றாலும் சென்னையில் செட்டிலாகிவிட்ட சேட்டு குடும்பத்து பொண்ணு நான். நன்றாக தமிழ் பேசுவேன்.
பள்ளி, கல்லூரி நாடகங்கள், மாடலிங் என்று வளர்ந்து விளம்பர படங்களுக்கு வந்தேன். தோழிகள் சினிமாவில் நடிக்க சொல்லி வற்புறுத்தியதால் இருக்கு ஆனா இல்ல படத்தில் நடித்தேன். இப்போது ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான் படத்தில் நடித்து வருகிறேன். இன்னும் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறேன்.
எங்கள் குடும்பம் ஆச்சாரமானது அவர்கள் என்னை சினிமாவில் நடிக்க அனுமதித்ததே பெரிய விஷயம். அதனால்தான் நான் பேஷன் ஷோக்களில் கூட கலந்து கொள்வதில்லை. கிளாமராக உடை அணியே வேண்டும், நள்ளிரவு வரை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதாலேயே பேஷன் ஷோ பக்கம் போகவில்லை. சினிமாவிலும் அப்படித்தான், கிளாமராக நடிக்கவே மாட்டேன். அனுஷ்கா, ஜோதிகா இப்போது வந்துள்ள லட்சுமிமேனன், இவர்கள் கிளாமர் இல்லாமலேயே ஜெயிக்கவில்லையா அப்படி நானும் ஜெயிப்பேன் என்கிறார் மனீஷா ஸ்ரீ.