சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் கமல், அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர். அதேபோல், அவரின் மகளும், நடிகையுமான, ஸ்ருதி ஹாசனும், அசைவ உணவுகள் மீது அலாதி பிரியம் கொண்டவராக இருந்து வந்தார். வெளிப்புற படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும், அங்கு கிடைக்கும் ஸ்பெஷல் அசைவ உணவு அயிட்டங்களில் புகுந்து விளையாடி வந்த ஸ்ருதி, மீன், இறால் உணவுகளை அதிகமாக ரசித்து ருசித்து வந்தார். இந்த நிலையில், 'அசைவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது உடம்புக்கு நல்லதல்ல' என்று, சமீபத்தில் ஸ்ருதிக்கு, அவரது தந்தை கமல் அட்வைஸ் செய்தாராம்.தந்தையின் இந்த உபதேசத்தை, உடனடியாக ஏற்றுக் கொண்ட ஸ்ருதி ஹாசன், இனி அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே தான் எடுத்துக்கொள்ளப் போவதாக இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.