சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரட்சகன், ஸ்டார் படங்களை இயக்கிய பிரவீன் காந்தி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் புலிப்பார்வை. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்தப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாலசந்திரனை ஒரு குழந்தை போராளி போன்று காண்பித்து இருப்பதாக கூறி படத்திற்கு சில மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபாகரனாக நடித்துள்ள வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், புலிப்பார்வை படம் நிச்சயம் தமிழர்களுக்கு எதிரான படமாக இருக்காது. சீமான், பழ.நெடுமாறன் போன்றோர் இந்தப்படத்தை பார்த்துள்ளனர். அவர்கள் சில காட்சிகளை நீக்க சொல்லியுள்ளனர். அதுதொடர்பான பணி நடந்து வருகிறது. மேலும் படத்தில் பாலச்சந்திரனை குழந்தை போராளி போன்று இடம் பெறும் காட்சிகளை மறைக்கும் வேலைகளும் நடந்து வருகிறது.
யூகத்தின் அடிப்படையில் பலரும் பல்வேறு கருத்துக்களை சொல்கிறார்கள். படத்தில் எந்த ஒரு சர்ச்சைக்குரிய காட்சிகளோ, வசனங்களோ இருக்காது. இந்தப்படம் திரைக்கு வரும்போது தமிழர்கள் கொண்டாடும் படமாக இருக்கும். மேலும் படத்தை திரையிடுவதற்கு முன்பாக தமிழ் உணர்வாளர்களுக்கு இந்தப்படம் போட்டு காண்பிக்கப்படும், அவர்கள் படத்தை பார்த்து, சர்ச்சை காட்சிகள் எதுவும் இருக்கு என்று ஒருவர் கூறினால் கூட கண்டிப்பாக நாங்கள் இந்தப்படத்தை வெளியிட மாட்டோம், அதனால் எங்களுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் வந்தாலும் கவலையில்லை என்று கூறியுள்ளார்.