சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
இப்போது ஒரு படத்தை முடிப்பதை விட அதை வெளியிடும் நேரத்தில்தான் ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்சனைகள் உருவாகி வருகிறது. அதையும் மீறி வெளியாகும் படங்கள் பத்தில் ஒன்பது படங்கள் ஓடுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில படங்களில் இலங்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இதைப்பற்றி டைரக்டர் சங்கத்தலைவர் விக்ரமன் கூறுகையில், 30 வருசத்துக்கு முன்பு நான் உதவி இயக்குனராக வேலை செய்து வந்த காலத்திளெல்லாம், சென்னைக்கு அருகில் உள்ள கோவூர், போரூர் போன்ற ஏரியாக்களில்தான் படப்பிடிப்புகள் நடக்கும். ஆனால் சும்மா கெடக்கும் தரிசி நிலத்தில் நாங்கள் கேமராவை வைத்து படப்பிடிப்பு நடத்தினால்கூட, திடீரென்று யாரோ வந்து அது என் இடம். அதனால் ஒரு தொகையை கொடுத்து விட்டு படப்பிடிப்பு நடத்துங்கள் என்பார்கள். இதேமாதிரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினைகள் வரும்.
இப்படி தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டதால்தான் பின்னர் அவுட்டோர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு நடக்கம்போது ஏற்பட்ட பிரச்சினைகள் பின்னர் இல்லை. ஆனால், படம் திரைக்கு வரும்போதுதான் இப்போது பிரச்சினைகள் வருகிறது. இதனால் படங்கள் வெளிவர முடியாமல் தடுமாறிக்கொண்டு கிடக்கின்றன. ஏதாவது ஒரு விசயத்தை கிளப்பி விட்டு படங்களை தடை பண்ண முயற்சி செய்கிறார்கள் என்று கூறும் விக்ரமன், இதனால் சினிமா தொழில் நசுக்கப்பட்டு வருவதோடு, சினிமாத் தொழிலை எங்களால் சுதந்திரமாக செய்ய முடியவில்லை என்கிறார்.