அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாக போகிறார் என்கிற செய்திகள் பரவலாக வந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் அமலா மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கப் போகிறார். தமிழில் மணிரத்னம் மகனுடன் நடிக்கப்போகிறார். இந்திப் படத்திலும் தனுசுடன் நடிக்கப்போகிறார் என நிறைய செய்திகள் வந்தது.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதேவி, சற்று கோபத்துடன் கூறியிருப்பதாவது: சினிமாவில் ஜான்வி நடிக்கப்போகிறார் என்று ஏன் தான் எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறார்களோ தெரியவில்லை. அவள் கவனம் முழுவதும் இப்போது படிப்பில்தான் இருக்கிறது. இதுபோன்ற செய்திகள் அவளது படிப்பை பாதிக்கும் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்.
பொது நிகழ்ச்சிகளுக்கு மகளை அழைத்து வந்தால் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்று அர்த்தமா?. பல வருடங்களுக்கு பிறகு நான் சினிமாவில் நடிக்கிறேன். என்னோடு அவள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசைப்பட மாட்டாளா?. சினிமாவில் என் மகளை அறிமுகப்படுத்த நான் அவளை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரவேண்டுமா? வீட்டுக்குள் இருந்தே அறிமுகப்படுத்த முடியாதா?. ஒரு மகளை எப்படி எப்போது கொண்டு வரவேண்டும் என்பது தாயாகிய எனக்குத் தெரியும். மற்றவர்கள் அது பற்றி கவலைப்பட வேண்டாம். என்கிறார் ஸ்ரீதேவி.