சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மாப்பிள்ளை பட சூட்டிங்கில் பங்கேற்பதற்காக காரில் சென்றபோது விபத்தில் சிக்கி காமெடி நடிகர் மதன்பாப் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் மாப்பிள்ளை. இப்படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது. தற்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியி்ல மாப்பிள்ளை சூட்டிங் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக காமடி நடிகர் மதன்பாப் காரில் ஸ்ரீவைகுண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு திருப்பத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் மதன்பாபு சென்ற கார் நொறுங்கியது. நடிகர் மதன்பாப் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்து காரணமாக மதன்பாப் தொடர்பான காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.