சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
லட்சுமிராய் பல ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வருகிறார். என்றாலும், இன்னமும் பர்பாமென்ஸ் நடிகை என்கிற முத்திரை அவர் மீது விழவில்லை. அதேசமயம், கவர்ச்சிகரமான கிளுகிளுப்பான வேடங்களுக்கு ஏற்ற நடிகை என்ற முத்திரையுடன் களத்தில் நின்று கொண்டிருககிறார். அந்தவகையில், திடீர் திடீரென்று காணாமல் போனாலும், தீவிர முயற்சியின் காரணமாக மீண்டும் படங்களை கைப்பற்றி நடித்து வரும் லட்சுமிராய், தற்போது தமிழில் அதர்வாவுடன் இரும்புக்குதிரையிலும், சுந்தர்.சி இயக்கும் அரண்மனை படத்திலும் நடித்து வருகிறார். இநத படங்களில் அவருக்கு கதாநாயகி வேடம் இல்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகத்தான் நடித்து வருகிறார்.
அதேசமயம், மலையாள சினிமாவில் தற்போது மம்மூட்டியுடன் ராஜாதிராஜா என்ற படத்தில் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். ஏற்கனவே மலையாளத்தில் லட்சுமிராய் முகேஷ், திலீப் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்த , சட்டம்பி நாடு, அண்ணன் தம்பி போன்ற படங்கள் மெகா ஹிட் என்பதால், அவர் மீது ராசியான நடிகை என்கிற செண்டிமென்ட் அழுத்தாக பதிந்துள்ளதாம்.
அதன்காரணமாகத்தான், இவரே மலையாள சினிமாவை வேண்டாமெனறு ஓடிவந்தலும், இவரை விடாமல் துரத்திக்கொண்டிருக்கிறார்கள் மலையாள பட இயக்குனர். அந்த வகையில், இப்போது மம்மூட்டியுடன் நடிக்கும் லட்சுமிராய் , மலையாளத்தில் அதிரடியாக புதிய படங்களை கைப்பற்றி நிரந்தர இடத்தை பிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார்.