ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு | தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் | ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' |
சூப்பர் ஸ்டார் ரஜினி பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப்போலவே சாயல்கொண்ட நடிகராக வலம் வந்தவர் நளினிகாந்த். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ரங்கோன் ரவுடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவர்தான் நளினிகாந்த் என்று பெயரும் வைத்தார். கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி படங்களில் வில்லனாக நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 90 படங்களுக்கு மேல் நடித்த நளினிகாந்த் அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து இயக்கினார்.
தற்போது யாமிருக்க பயமே படத்தின் மூலம் சினிமாவில் ரீ- என்ட்ரி ஆகியிருக்கிறார். அந்த படத்தில் பேய்மாளிகையில் வசிக்கும் முதியவராக நடித்துள்ளார். அடுத்து ஏ.ஆர்.முருகாசின் கத்தி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"சினிமாவை விட்டு விலகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. சின்னத்திரையில் இருந்தேன். திடீரென்று ஒரு நாள் என்னை அழைத்து யாமிருக்க பயமேவில் நடிக்க வைத்தார்கள். படத்தின் என் கேரக்டர் பேசப்படுவதால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன்" என்கிறார் நளினிகாந்த்.