பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
“கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சேது - சந்தானம் இணைந்து நடித்து வரும் படம் “வாலிப ராஜா'. இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. சேது - சந்தானம் பங்குபெற்ற “வாலிப ராஜா படத்தின் ஓப்பனிங் சாங்கிற்காக சென்னையில் பல இடங்களில் பாடல் காட்சி படமாக்கப் பட்டு வருகிறது. இந்தப் பாடல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதன் இசையமைப்பாளர் ரதன் மிகவும் வித்தியாசமான முறையில் கலக்கியுள்ளார்.
அதாவது திரை இசைப்பிரியர்களுக்கு பிடித்த சமீபத்திய பாடல்களான 'அட்டகத்தி' படப் பாடல் “நடுக்கடலுல..”, 'வேலையில்லா பட்டதாரி' படப் பாடல் “வாட்டக்கருவாடு”, 'கும்கி' - “சொல்லிட்டாளே..”, 'தலைவா' - “வாங்கண்ணா வணக்கங்கண்ணா”, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' - “ஊதா கலரு ரிப்பன்”, 'சூது கவ்வும்' - “காசு பணம் துட்டு”, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' - “கண்ணா லட்டு தின்ன ஆசையா”, 'ஆடுகளம்' - “ஒத்த சொல்லாலே..”, 'பாண்டிய நாடு' - “ஒத்தக்கட..”, 'ராஜா ராணி' - “பேபி சாங்..” 'ஒரு கல் ஒரு கண்ணாடி' - “வேணாம் மச்சான்” போன்ற சூப்பர்ஹிட் பாடல்களை ஒன்றிணைத்து கானா பாலா தனது ஸ்டைலில் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
இந்தப் பாடலை சேதுவும், சந்தானமும் நகைச்சுவை உணர்வுடன் பாடுவதுபோல் படமாக்கப்பட்டது. இருவரும் சிறப்பாக நடித்து கலக்கியுள்ளார்கள். மேலும் இசையமைப்பாளர் ரதனே எழுதி இசை அமைத்த பாடல் “அச்ச்ச்சோ அச்ச்ச்சோ... டோண்ட் யூ ஒர்ரி.... எல்லாத்துக்கும் ஐயா ரெடி...” என்ற பாடலும் படத்தில் பட்டயை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பாடலை இங்கிலாந்தில் உள்ள பாப் சிங்கரான “அர்ஜூன்” பாடி கலக்கியுள்ளது சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.