சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தனது தந்தை கங்கை அமரன், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல முகம் காட்டியதைப்போலவே பிரேம்ஜியும் சினிமாவில் பல முகம் காட்டத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் காமெடியனாக நடித்து தன்னை வளர்த்து கொண்ட அவர் தற்போது மாங்கா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
தற்போது கத்தியில் விஜய் இரண்டு வேடம், சத்யதேவ் படத்தில் அஜீத் இரண்டு வேடம் என நடிப்பது போன்று இந்த மாங்காவில் பிரேம்ஜியும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதோடு, தோழா என்ற படத்தில் இசையமைக்கத் தொடங்கியவர் சமீபத்தில் என்னமோ நடக்குது என்ற படத்திற்கும் இசையமைத்தார்.
அந்த படத்தின் இசை பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், பிரேம்ஜிக்கு நல்லதொரு அடையாளமாக அமைந்தது. அதனால், இனி நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து இசையமைப்பதிலும் கவனம் செலுத்தப்போகிறாராம் பிரேம்ஜி. அதோடு, சிலரது இசை சாதனையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டி உற்சாகப்படுத்துவார்கள்
ஆனால், பிரேம்ஜிக்கு அந்த மாதிரி யாரும் இதுவரை பட்டப்பெயர் சூட்டவில்லை, அதனால் தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் விதமாக இசை இளவல் என்ற பட்டத்தை தனது பெயருக்கு முன்பு இணைத்துள்ளார். இதையடுத்து, இதுவரை பிரேம்ஜி என்று அவரை அழைத்த அவரது கோலிவுட் நண்பர்களான, மிர்ச்சி சிவா, ஜெய், விஜய்வசந்த், வைபவ் உள்ளிட்டோர் அவரை இசை இளவல் என்றுதான் அழைக்கிறார்களாம். அப்படி அவர்கள் தன்னை அழைக்கும்போது உற்சாகம் பீறிட்டுக்கொள்டு வர, காலரை தூக்கிவிட்டபடி நடக்கிறார் பிரேம்ஜி.