சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மைனா, கும்கி என வெற்றிப்படங்களை அடுத்து பிரபுசாலமனின் “கயல்” படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வழங்க காட் பிக்சர்ஸ் “கயல்” இந்த படம் தொழில்நுட்பத்தில் உயரிய படமாக வளர்த்து வருகிறது. முழு படப்பிடிப்பையும் முடித்து விட்ட திருப்தியில் உள்ளார் பிரபுசாலமன். தனது வாழ்நாள் கனவாக பிரபுசாலமன் நினைத்திருந்த விஷயம் இப்போதுதான் கைகூடுகிறது. இயேசு பிறந்த ஊருக்கு தன் குடும்பத்துடன் சென்று வருவதுதான் அவரது லட்சியம். அதற்காக இம்மாதம் எட்டாம் தேதி குடும்பத்தாருடன் இஸ்ரேல் செல்கிறார். இயேசு பிறந்த இடமான பெத்தலகாம், அவர் வளர்ந்த இடமான நாசரேத், சிலுவையில் அறையப்பட்ட மலை, ஞானஸ்தானம் பெற்ற ஜோடான் நதி, பத்து கட்டளைகள் பெற்ற சீனாஸ் மலை போன்ற இடங்களில் பிரார்த்தனைகளை முடித்து விட்டு பதினேழாம் தேதி சென்னை திரும்புகிறார். அவருடன் 60 பேர் கொண்ட நண்பர்கள் குழுவும் இஸ்ரேல் செல்கிறது.
இன்று பிரபுசாலமனுக்கு பிறந்தநாள் : பிரபுசாலமன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.