சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் அறிமுகமான மாதவன், அதன்பிறகு என்னவளே, மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட சில படங்களிலும் தொடர்ந்து சாக்லேட் பாயாகவே வலம் வந்தார். ஆனால் லிங்குசாமியின் ரன் படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாகவும் மாறிவிட்டார். அதையடுத்து, கமலுடன் நடித்த அன்பே சிவம் படத்திற்கு பிறகு நல்லதொரு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகவும் கோலிவுட்டில் இடம் பிடித்தார் மாதவன்.
அதையடுத்தும் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் அதிகமாக நடித்து வந்த மாதவன், லிங்குசாமியின் வேட்டை படத்திற்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்தி, ஆங்கில படங்கள் என்று கவனத்தை திருப்பி விட்டார். அதற்கு காரணம், அவர் எதிர்பார்க்கும் வேடங்கள் கிடைக்காததுதானாம். வழக்கமான கதைகளே வருகிறது என்று சொல்லிக்கொண்டு வடக்கு நோக்கி பறந்து விட்டார்.
அப்படி சென்றவரை இப்போது ஸ்ரீகாந்த் நடித்த துரோகி படத்தை இயக்கிய பெண் இயக்குனர் சுதா மீண்டும் தமிழுக்கு அழைத்து வருகிறார். இந்த படத்தில் பாக்சராக நடிக்கிறாராம் மாதவன். தற்போது அவர் நடித்துள்ள நைட் ஆப் த லிவ்விங் டெத் என்ற படத்துக்காக ஏற்கனவே உடல்கட்டை ஸ்லிம் பண்ணி கம்பீரமாக்கியுள்ள மாதவன், அந்த உடல்கட்டோடு அப்படியே தமிழ்ப்படத்திலும் நடிக்கிறாராம்.
ஆக, முதலில் பாலிவுட் நடிகராக கோலிவுட்டுக்கு வந்தவர், இப்போது ஹாலிவுட் நடிகராகி மீண்டும் கோலிவுட்டுக்கு ரீ-என்ட்ரி ஆகிறார் மாதவன்.