Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கஷ்டத்தில் பழம்பெரும் நடிகை! கண்டுகொள்ளாத நடிகர் சங்கம்!!

08 மார், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன், கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்த்து கொண்டிருக்கிறார். அந்த பழம்பெரும் நடிகையின் பெயர் காஞ்சனா. சிவந்த மண், காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களின் மூலம் லட்ச லட்சமாய் சம்பாதித்தார். ஆனால் இப்போது பெங்களூருவில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.

பெங்களூருவின் புறநகர் பகுதியான எலகங்காவில் உள்ள கணேசா கோயிலுக்கு அருகில் வசித்து வரும் அவர் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாராம். மஞ்சள் நிற பழைய நூல் புடவை, கிழிந்த ஜாக்கெட்டுடன் அந்த பகுதியை வலம் வரும் காஞ்சனா, ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படித்து முடித்து விட்டு ஏர் ஹோஸ்டஸ் பணியில் சேர்ந்தேபோதே ஜமீன் வீட்டு பெண் வேலைக்கு ‌போவதா? என்று குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாம். குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி நடிகையானவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரியாத சமீபத்தில் சரோஜாதேவிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்பார் என திரையுலகை சேர்ந்த பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சரோஜாதேவியே நேரில் சென்று அழைத்தும் அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் காஞ்சனா தவிர்த்தார்.

இந்த நிலையில்தான் காஞ்சனா பற்றிய இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. தான் இப்போது படும் கஷ்டம் குறி்த்து காஞ்சனா அளி்த்துள்ள பேட்டியில், ஒருவர் நன்றாக வாழ்ந்ததை வெளிப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படலாம். எனது தற்போதைய வாழ்க்கையை‌ வெளியுலகம் அறிந்து, ஐயோ... இப்படி ஆயிட்டாளே... என்று என் மீது இரக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நன்றாக வாழும் காலத்தில் தான் சம்பாதிப்பதை யாரையும் நம்பி ஒப்படைக்கக் கூடாது. அப்படி செய்தால் என்னை என்னைப்போலத்தான் கஷ்டப்பட வேண்டும். இது என் தலைவிதி. மகாராணி போல வாழ்ந்தவள் இன்று இப்படி அல்லாடறேன், என்று கூறியுள்ளார்.

திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் எத்தனையோபேர் காஞ்சனாவைப் போன்று கஷ்டத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் வீரியமுடனம் பேசும் நடிகர்களும், நடிகர் சங்கமும் இதுபோன்று கஷ்டப்படும் நட்சத்திரங்களுக்கு ஏதாவது உதவி செய்வார்களா? அல்லது கப்சிப்பென கண்களை மூடிக் கொண்‌டே இருந்து விடுவார்களா?

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? அடிமைப் பெண்மறக்க முடியுமா? அடிமைப் பெண் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

V.Rajagopal - Madurai,இந்தியா
04 செப், 2011 - 16:01 Report Abuse
 V.Rajagopal நடிகர் சங்கம் நிச்சயமாக உதவி செய்ய வேண்டும்.
Rate this:
murugesh - dhaka,வங்கதேசம்
21 ஜூலை, 2011 - 22:35 Report Abuse
 murugesh கொடுமையான செய்தி
Rate this:
கலா - chennai,இந்தியா
05 மே, 2011 - 04:16 Report Abuse
 கலா ஐயோ...மக்கள் யாருக்கும் மனசாட்சி இல்லையா.
Rate this:
பிரியா - tamilnadu,இந்தியா
05 மே, 2011 - 04:12 Report Abuse
 பிரியா நடிகர் சங்கத்துக்கு பழைய நடிகைகளை பார்க்க எங்க நேரம் இருக்கு. அவர்கள் புது நடிகை பின்னாடி சுத்தவே நேரம் சரியாய் இருக்கும்.அவர்களுக்கும் இந்த நிலைமை வரும். அப்போ பீல் பண்ணுவாங்க.இதுங்களுக்கு எல்லாம் நடிகர் சங்கம் ஒரு கேடா.....
Rate this:
கோவிந்த் - UK,இந்தியா
05 மே, 2011 - 00:24 Report Abuse
 கோவிந்த் தமிழக அரசு உடனே இவங்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் ..நல்ல நடிகை ...இவங்க கஷ்டபடுவது தமிழ் திரை உலகிற்கு ஏற்பட்டுள்ள அவமானம் .... தமிழக அரசு கவனிக்குமா ?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in