சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினேகா கதாநாயகியாக நடித்துள்ள முதல் படம் உன் சமையல் அறையில். இப்படத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு குடும்பத்தலைவியாக நடித்திருக்கிறார். அதாவது இதுவரை சினேகாவின் முகத்தில் சிரிப்பை மட்டுமே ரசித்த ரசிகர்கள், இந்த படத்தில் அவர் வலியை வெளிப்படுத்தியிருப்பதையும் ரசிக்கப்போகிறார்களாம். அந்த அளவுக்கு கேரக்டரின் தன்மையை உணர்ந்து பக்குவமாக நடித்திருப்பதாக சொல்கிறார் சினேகா.
மேலும், இதுவரை நான் சினிமாவில் நடித்த அனுபவம் இந்த படத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்த எனக்கு உதவியது. அதனால், சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறேன். அதோடு, நான் இளையராஜாவின் தீவிரமான ரசிகை. அதனால் அவரது பாடலுக்கு நான் ஆடிப்பாடி நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது.
அதை இந்த படம் மூலம் பிரகாஷ்ராஜ் நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்று சொன்ன சினேகா, தான் பேசி முடித்ததும், அதே மேடையில் அமர்ந்திருந்த இளையராஜாவின் காலைத் தொட்டு வணங்கியபடி இருக்கையில் அமர்ந்தார்.