அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
தமிழ்ப்படங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக சமீபகாலமாக ஹாலிவுட் டெக்னீஷியன்களை இறக்குமதி செய்து வருகிறார்கள் கோலிவுட் டைரக்டர்கள். அந்த வரிசையில், சிம்புவைக்கொண்டு தான் இயக்கி வரும் சட்டென்று மாறுது வானிலை படத்துக்கு ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த டேன் மேகர்தர் என்ற ஒளிப்பதிவாளரை கொண்டு வந்தார் கெளதம்மேனன்.
அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இப்போது அஜீத்தை அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டதால், அந்த படத்துக்கும் டேன் மேகர்தரையே கேமராமேனாக்கியிருக்கிறார் கெளதம். மேலும், இப்படத்தில் அஜீத் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிப்பதால், அதை வித்தியாசமான லென்ஸ் பயன்படுத்தி அவரது தோற்றத்தை மாறுபட்ட வடிவில் காண்பிக்கப்போகிறார்களாம்.
அதிலும், இரண்டு அஜீத்களும் மோதிக்கொள்ளும் காட்சியை பல கேமராக்களை வைத்து, இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத வகையில், புதுமையான முறையில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். அந்த காட்சிக்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு அதிநவீன கேமராவையும் கொண்டு வருகிறார்களாம். அந்த கேமரா தண்ணீருக்கு அடியில் நடப்பதைகூட வெளியில் இருந்தபடியே பக்காவாக ஜூம் பண்ணி காட்டு ஆற்றல் மிக்கதாம்.