சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பரத் நடித்த சேவல் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா. அதையடுத்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என வரிசையாக நடித்தவருக்கு ஸ்ரீகாந்துடன் நடித்த துரோகி படத்திற்கு பிறகு தமிழில் படமில்லை. ஆனால் அதையடுத்து ஒரு சின்ன இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஸ்ரீகாந்த் நடித்த எதிரி எண் 3 படத்தில் நடித்தார் பூனம் பாஜ்வா. ஆனால், அப்படம் பைனான்ஸ் பிரச்னையால் கிடப்பில் கிடக்கிறது.
அதனால், அடுத்தபடியாக தன்னை கோடம்பாக்க டைரக்டர்கள் கண்டு கொள்ளாததால், இப்போது மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் பெருச்சாழி என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார் பூனம் பாஜ்வா. அரசியல் கதையை மையமாகக்கொண்டு உருவாகும் இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்க உள்ளதாம். அதனால் தனக்கு பொருத்தமான மாடர்ன் கெட்டப்பில் படம் முழுக்க வளைய வருகிறாராம் பூனம்.
முன்னதாக, இப்படத்திற்காக தலைவா ராகினி நந்துவானி கமிட்டான பிறகு இன்னொரு நாயகிக்காக சில நடிகைகளிடம் பேசினார்களாம் ஆனால், அவசரத்துக்கு எந்த முன்னணி நடிகைகளின் கால்சீட் கிடைக்கவில்லையாம். அதனால், மோகன்லாலே தன்னுடன் சைனா டவுன் படத்தில் ஏற்கனவே நடித்து பரிட்சயமான பூனம் பாஜ்வாக்கு அழைப்பு விடுத்து இந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்தாராம்.
ஆக, மலையாளத்தில் மோகன்லாலின் ஆசீர்வாதத்துடன் இரண்டாவது ரவுண்டை தொடங்கியிருக்கிறார் பூனம்பாஜ்வா.