அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு |
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'நீதானே என் பொன்வசந்தம்' படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தனது ஆர்.எஸ்.இன்போடெயிண்மெண்ட் சார்பில் தயாரித்து வரும் திகில் படத்துக்கு இல்ல ஆனாலும் இருக்கு என்று டைட்டில் வைத்திருந்தார். இதே பெயரின் சாயலில் இருக்கு ஆனா இல்ல என்ற டைட்டிலில் இன்னொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த பெயர் குழப்பம் பஞ்சாயத்துக்கு வந்தது. இந்த நிலையில் எல்ரெட் குமார் தனது படத்தின் பெயரை 'யாமிருக்க பயமே என்று மாற்றி விட்டார்.
இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஆதவ் கண்ணதாசன் நடிக்கிறார்கள். கே.வி.ஆனந்த் உதவியாளர் டீகே டைரக்ட் செய்கிறார். பெரும்பகுதி ஷ¨ட்டிங் முடிந்து விட்டது. மார்ச்சில் ரிலீஸ் செய்ய பிளான் பண்ணியிருக்கிறார்கள்.
"இது பக்கா பிளாக் காமெடி டைப் திகில் படம். குறுகிய கால தயாரிப்பு. இந்த நிலையில் டைட்டிலுக்கா வாதம் பண்ணிக்கிட்டு நேரத்தை வீணாக்க விரும்பல. அதான் நாங்களே தலைப்பை மாத்திட்டோம்" என்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.