சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பசங்க படத்தில் நடிகரானவர் விமல். அதையடுத்து களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலிருந்து மினிமம் கியாரண்டி ஹீரோவாக அதிக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் ஜன்னல் ஓரம் வெளியானது.
அப்படத்தைத் தொடர்ந்து ரெண்டாவது படம், நேற்று இன்று, புலிவால் ஆகிய படங்களில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்க, வெயிலோடு விளையாடு, அஞ்சல், மஞ்சப்பை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஆக, எப்போதும் பிசியாகவே இருக்கிறார் விமல்.
இந்த நிலையில், ஏற்கனவே ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவாகியிருந்த விமலுக்கு நேற்று இன்னொரு மகனும் பிறந்திருக்கிறான். ஆக, இரண்டு குழந்தைக்கு அப்பாவாகிவிட்ட விமல், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்த சந்தோசமான விசயத்தை தனது திரையுலக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார் விமல்.