சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பெண் தயாரிப்பாளர் ஷண்முகப்பரியா தயாரிக்க ராஜா டைரக்ட் செய்துள்ள படம் உயிர்மொழி. சர்தார்ஜி, சசி, சாம்ஸ், ராஜீவ். பாபு ஆண்டனி இவர்களுடன் நியூபேஸ் கீர்த்தி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் மியூசிக். இந்த மாத இறுதியில் படம் ரிலீசாகிறது. படத்தை பற்றி இயக்குனர் ராஜா கூறியதாவது: உலகம் தோன்றிய காலத்திலிருந்து மனிதர்கள் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமேகா என ஐந்து வகை குணங்களை கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்த 5 வகை குணங்களை கொண்டவர்களும் ஒரு பார்வையற்ற பெண்ணை காதலித்து அவளை அடைய முயற்சி பண்றாங்க. பார்வையில்லாத பெண்ணுக்கு அவர்களது குணங்கள் மட்டும்தான் தெரியும். இந்த நிலையில் அவள் எந்த குணம் கொண்டவனை செலக்ட் பண்ணுகிறார்கள் என்பதுதான் படத்தோட கதை.
நான் பல நாடுகளில் செயல்படும் விளம்பர கம்பெனியில் வேலை செய்கிறவன். விளம்பர படங்கள் இயக்கிய அனுபவத்தை கொண்டு இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கேன். தமிழ் சினிமாலவில் இது புது முயற்சியா இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.