சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மும்பையை சேர்ந்த பிங்கி சர்க்கார் மீனாட்சியாக கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்தார். அதற்கு பிறகு வந்த படங்களில் தன் மும்பை ஸ்டைல் கிளாமர் காட்டினார். டி.என்.ஏஎல் 4777, பெருமாள், ராஜாதிராஜா, மந்திரபுன்னகை, அகம் புறம் படங்களில் நடித்தார். அதற்கு பிறகு பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் மும்பைக்கே திரும்பிச் சென்று விட்டார்.
இப்போது வில்லங்கம் என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆகிறார். தான் கிளாமர் காட்டத் தொடங்கியதுதான் தன் கேரியர் இறங்க காரணம் என்பதை புரிந்து கொண்ட மீனாட்சி வில்லங்கம் படத்தில் சேலை அணிந்து அடக்க ஒடுக்கமாக நடிக்கிறார். முன்பை விட இப்போது குஷ்பு ரேன்ஞ்சுக்கு குண்டாகி இருப்பதால் சேலைக்கு பொருத்தமாக இருக்கிறார். நந்தா ஹீரோ. ரா.நா.சரவணன் டைரக்ட் செய்கிறார்.
"பொதுவா என்னை எல்லோரும் கிளமரா நடிக்கத்தான் கூப்பிடுவாங்க. இந்த படத்துல ஹோம்லி கேரக்டர்னு சொன்னாங்க. கதை பிடிச்சிருந்தது உடனே ஒத்துக்கிட்டேன். ஆனாலும் கிளாமரை கைவிடவில்லை. சினிமாலேருந்து கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்ததால சரியா ஜிம்முக்கு போகாததால கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன். இந்த கேரக்டருக்கு கொஞ்சம் வெயிட்டா இருக்கணும்னு சொன்னாங்க. அப்படியே வந்துட்டேன். உடம்பு இளைச்சும் ஒரு போர்ஷன் இருக்கு. பத்து நாள் ஜிம்முக்கு போனால் உடம்பை இளைக்க வைச்சுடுவேன்" என்கிறார் மீனாட்சி.