சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமந்தா ஆந்திராவின் முன்னணி நடிகை என்றபோதும், இன்னும் சிறுபிள்ளைப்போல்தான் இருக்கிறார். சினிமா விழாக்களில், சம்பந்தப்பட்ட படங்களைப்பற்றி பேச சொன்னால், தனது பர்சனல் விசயங்களையும் உளறி கொட்டுகிறாராம். அதேபோல், தனது பர்சனல் விசயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டிய இடத்தில் சினிமா பற்றி லூஸ் டாக் விடுகிறாராம். அதனால்தான் சமந்தா எதிரில் வருகிறார் என்றால் மற்றவர்கள் முன்னிலையில் தன்னைப்பற்றி என்ன பேசி மாட்டி விடப்போகிறாரோ என்று பதறுகிறாராம் சித்தார்த்.
அதுமட்டுமினறி, தனது டுவிட்டரில் சித்தார்த்திடம் தான் பேச நினைப்பதை அடிக்கடி வெளியிடுகிறார் சமந்தா. இதனால்தான் எங்களுக்கிடையே காதல் கீதல் என்று எதுவும் இல்லை என சித்தார்த் வாய் வலிக்க சொல்லிக்கொண்டு திரிந்தாலும், சமந்தா அவரைப்பற்றி வெளியிடும் அந்நியோன்யமாக வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவர்களின் காதலை உறுதிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தான் வழக்கமாக டுவிட்டரில் வெளியிடும் விசயங்களைப்போன்று நாகார்ஜூனாவுடன் நடித்து வரும் மனம் படத்தைப்பற்றிய சில ரகசியங்களை சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து விட்டாராம் சமந்தா. இதனால் செம டென்சனான நாகார்ஜூனா, படத்தை தயாரிக்கும் நானே இதுவரை அப்படம் பற்றிய முக்கிய விசயங்களை வெளியிடாமல் வைத்திருக்கிறேன். அதற்குள் என்ன அவசரம்? என்று சாடி விட்டாராம்.
இதனால் ஆடிப்போனாராம் சமந்தா. எப்போதும் போல் அவர் விளையாட்டாக வெளியிட்ட விசயம் நாகார்ஜூனா குடும்பத்தையே கோபத்துக்கு ஆளாக்கி விட்டது. இதனால் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் சமந்தா இப்போது சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு திரிகிறாராம்.