சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நீண்ட இடைவெளிக்கு பின், ரஜினி நடிக்கும்,கோச்சடையான் அனிமேஷன் படத்தின் டீசர், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ‘3டி’ தொழில்நுட்பத்தில் தயாராகும் படம் என்பதாலும், ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கும் படம் என்பதாலும், இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. டீசரின் துவக்கத்தில், பிரமாண்ட அரண்மனை, மைதானம் ஆகியவை காண்பிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, ஏராளமான குதிரைகளில் வீரர்கள் அணிவகுக்க, ரஜினி, வாளோடு பாய்ந்து வருகிறார். இந்த படத்தில், ரஜினி இளமையுடன் தோன்றுகிறார். இதனால், அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். இதற்கிடையே, கோச்சடையான் படத்தின் உண்மையான டீசர் வெளியாவதற்கு முன்பே, ஆர்வ கோளாறு காரணமாக, சிலர் தங்கள் இஷ்டத்துக்கு, ரஜினி நடித்த பழைய படங்கள் சிலவற்றின்
காட்சிகளை சேர்த்து, போலி டீசர்களை இணையதளங்களில் வெளியிட்டதால், அவரின் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.