சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் டிரைய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியன்று (செப்படம்பர் 9) ரிலீசாகிறது. தற்போது கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி உள்ளது. 125 கோடி ரூபாய் செலவில் மோசன் கேப்ச்சர் (அவதார்) தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இந்தப் படத்துக்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இதன் வியாபார எல்லையை தயாரிப்பு நிறுவனம் விரிவுபடுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் படத்தை கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறது.
அதற்காக பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா ஆகிய மொழிகளிலும் படத்தை டப் செய்கிறது. ரஜினி படங்களுக்கு வரவேற்பு இருக்கும் ஜப்பான், இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ் நாடுகளில் அந்தந்த மொழியின் சப் டைட்டிலுடன் ரிலீஸ் பண்ண முடிவு செய்திருக்கிறது. இதுதவிர கோச்சடையான் கதையுடன் கூடிய காமிக் புத்தகங்கள், ஆன்லைன் விளையாட்டுகள், வீடியோ கேம்களையும் கொண்டு வர இருக்கிறார்கள். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவார்கள் என்று தெரிகிறது. அது தவறினால் டிசம்பர் 12 ரஜினி பிறந்த நாளில் உறுதியாக ரிலீசாகிறது.