டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக உள்ளார். இவர் தலைமையிலான நிர்வாகத்துக்கு எதிர்கோஷ்டியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால், பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 7-ந்தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு தற்போது பொருளாளராக பதவி வகிக்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணுவும், அதே தலைவர் பதவிக்கு தயாரிப்பாளரும், இயக்குனருமான கேயாரும் போட்டியிடுகின்றனர்.
3 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் உள்ள தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 800 முதல் 900 பேர் வரை வாக்களிக்க தகுதியானவர்களாம். இவர்கள் வாக்களித்து தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜெகதீசன், வெங்கட்ராமன் ஆகியோர் அதிகாரிகளாக இருந்து நடத்துகிறார்களாம். செப்டம்பர் மாதம் 7-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறதாம்.