'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

பிரேமலு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிரிஷ் ஏ.டி, ‛பிரேமலு 2'ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அந்த கதையில் திருப்தி இல்லாததால் தற்காலிகமாக அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து கிரிஷ் ஏ.டி இயக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக பிரேமலு மமிதா பைஜூ நடிக்கிறார். இதை பஹத் பாசில் தயாரிக்கிறார். இதற்கு ' பெத்லெம் குடும்ப யூனிட்' என தலைப்பு வைத்துள்ளனர் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
தற்போது இந்த படத்திற்கான இசையமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பை 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கி, 2026 ஆகஸ்ட் மாதத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.




