டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்நிலையில் அடுத்து ஒன்பதாவது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கப் போகிறார். அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் இந்த பிக்பாஸ் சீசன்-9 தொடங்க உள்ளது.
அதுகுறித்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த சீசன்- 9ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன், நடிகர் சித்து, சீரியல் நடிகை ஜனனி, பாரதி கண்ணம்மா பரீனா ஆசாத் இவர்கள் தவிர இன்னும் சில நடிகர் நடிகைகளும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.




