ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

மலையாளத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். தமிழில் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தையும், கார்த்தி நடித்த 'தம்பி' படத்தையும் இயக்கியவர். தற்போது 'மிராஜ்' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற 'லோகா' படம் குறித்த தனது கருத்துக்களைப் பேசியுள்ளார்.
“"ஒரு தொழில்துறையில் பல்வேறு வகையான திரைப்படங்கள் இருக்க வேண்டும். பொதுவாக நடப்பது என்னவென்றால், ஒரு வகையான திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகும்போது, எல்லோரும் அதே வகையை உருவாக்கத் தொடங்கிவிடுகிறார்கள். லோகாவின் வெற்றியால், இப்போது எல்லோரும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை உருவாக்கத் தொடங்குவார்கள் என்ற அபாயம் உள்ளது. அது சரியான விஷயம் இல்லை."
இப்போது லோகா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதால், மற்ற வகைகளில் பரிசோதனை செய்து அவற்றையும் வெற்றிகரமாக்குவது ஒரு சவாலாக இருக்கும். நான் எல்லா வகையான திரைப்படங்களையும் செய்ய விரும்புகிறேன்," என்றார்.
அவர் சொல்வதும் சரிதான். அது மலையாளத்தில் மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் அப்படித்தான் நடக்கும்.




