மதுரை மண்ணின் மைந்தன்... ‛சொக்கத்தங்கம்' விஜயகாந்த் பிறந்ததினம் இன்று | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் கல்யாணி பிரியதர்ஷினின் 2 படங்கள் | பிரேமலு நடிகருக்கு காய்ச்சல் : படப்பிடிப்பை ரத்து செய்த மோகன்லால் | இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா | ஒளிப்பதிவாளர் விரல் துண்டானது ஆனாலும், மறுநாளே வந்தார்: ஏ.ஆர்.முருகதாஸ் | ‛ஆட்டி' பெயர் சொல்லும் படமாக இருக்கும் : அபி | நடிகர் சங்க புதுகட்டடம் : விஜயகாந்த் பெயர் சூட்டப்படுமா | தள்ளிப் போகிறதா துல்கர் சல்மானின் 'காந்தா' ? | சிறிய படங்களுடன் விநாயக சதுர்த்தி ரிலீஸ் | ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் ? |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் நடித்துள்ள ‛மதராஸி' படம் செப்., 5ல் ரிலீஸாகிறது. சென்னையில் நடந்த இப்பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் முருகதாஸ், விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேசியது தான் கோலிவுட்டில் ஹாட் டாபிக் ஆக பேசப்படுகிறது. அவர் பேசியது...
அன்று என்னை பார்த்து சிரித்தார்கள்
"நான் விழும்போது, எழும்போதும் கொடுக்கிற என் ரசிகர்களுக்கு, என் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. என் அப்பா பெயரும் முருகதாஸ் தான். அவருக்கு முருகதாஸ் இயக்கிய ரமணா படம் ரொம்ப பிடிக்கும். இப்ப அவர் இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பாரு. 14 ஆண்டுகளுக்கு முன்னால நடந்த பிளாஷ்பேக்கை இப்ப சொல்றேன். முருகதாஸ் இயக்கிய எழாம் அறிவு பட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க என்னை கூப்பிட்டாங்க. அப்புறம், ஒரு ஹீரோவை வச்சு போயிடலாம்னு முடிவு செய்தாங்க. அந்த நிகழ்ச்சியை, நடிகர் ஜெய் அண்ணன் தொகுத்து வழங்கினார். அந்த சமயத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிற வாய்ப்பு கிடைத்தால், முருகதாஸ் சார் முன்னாடி எதாவது பண்ணி சினிமா வாய்ப்பு வாங்கிடலாம்னு நினச்சேன். அது நடக்கலை.
அப்புறம் அவருடைய தயாரிப்பில் (மான் கராத்தே) எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த படத்தோட விழாவில் பேசியபோது முருகதாஸ், ஷங்கர் படத்துல நடிக்கணும்னு சொல்லியிருந்தேன். அப்போ எல்லோரும் என்னை கலாய்ச்சாங்க. என்பேச்சு கேட்டு சிரிச்சாங்க தொடர்ந்து உழைத்தால் மேல வரலாம்னு நினைத்தேன். ஒரு காலத்துல முருகதாஸ் இயக்கிய, கஜினி படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் அடுத்த நாள்தான் படத்தை பார்த்தேன். இன்னைக்கு முருகதாஸ் இயக்கத்துல நடிச்சிட்டு இங்கே நிற்கிறேன்.
உண்மை காதலை பார்ப்பீங்க
மதராஸி படம் ஷாரூக்கான் நடிக்க வேண்டியது. அதாவது எஸ்ஆர்கே நடிக்க வேண்டிய படத்துல இந்த எஸ்கே நடித்தது பெரிய விஷயம். நான் 10-வது படிக்கும்போது முருகதாஸ் சாரோட முதல் படம் ரிலீஸ் ஆனது. இன்னைக்கு என் பொண்ணு 7-வது படிக்கிறாங்க. எனக்கு துப்பாக்கி படம் எவ்வளவு பிடிக்கும் நான் சொல்லியிருக்கேன். இன்னைக்கு ஒரு பக்கம் துப்பாக்கி டைரக்டர், இன்னொரு பக்கம் துப்பாக்கி வில்லன் இந்த படத்திலும் வில்லன். இருவருக்கும் இடையே இந்த படத்துல நான் இருக்கிறேன்.
ஒரு குரலை ஒரு காட்சிக்கு எப்படி பயன்படுத்தணும்னு, அய்யப்பனும் கோஷியும் படத்துல பிஜு மேனன் சார் கிட்ட நான் காத்துக்கிட்டேன். அவரும் இந்த படத்துல இருக்கிறார். லவ் என்பது தியாகராஜ பாகவதர் காலத்துல இருந்து அனிருத் காலம் வரைக்கும் இருக்கிற எவர்கிரீன். இப்போது ஜென் சி (gen z) பண்றதெல்லாம் காதலானு கேட்கிறாங்க. உண்மையான காதலாக இருந்தால் உயிரைக்கூட கொடுப்பாங்க, அதுதான் காதல். இந்த படத்துல மாலதிங்கிற பொண்ணுக்கு ரகுங்கிற பையன் கொடுக்கிற உண்மையான காதலைப் பார்ப்பீங்க. அதுதான் படம்.
அண்ணன் அண்ணன் தான்
ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சல்மான், உட்பட பல பெரிய ஹீரோ வெச்சு படம் பண்ணியவர் முருகதாஸ். அந்த பட்டியலில் நானும் இணைந்தது சந்தோசம். விஜய் சார் கூட நான் நடிச்சதுக்குப் பிறகு எல்லோருக்கும் சந்தோஷம். ஆன சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் பண்ணாங்க. எப்போதும் அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான். அவர் அப்படி நினைச்சிருந்தால் எனக்கு துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார். நானும் அப்படி நினைச்சிருந்தால் அந்த துப்பாக்கி வாங்கியிருக்க மாட்டேன். நான் அவருடைய ரசிகர்களை பிடிக்க பார்க்கிறேன்னு சொன்னாங்க. எந்த ரசிகர்களை அப்படி பிடிக்க முடியாது. விமர்சனம் எல்லோருக்கும் வரும். நம்மை திருத்திக்க விமர்சனம் சொன்னால் எடுத்துக்கோங்க. சோசியல் மீடியவுல ஆயிரம் சொல்வாங்க.
நம்ம வீட்டு பிள்ளை
“நானும் அனிருத்திடம் அவருடைய திருமணம் பற்றி கேட்டேன். பொதுவாக திருமணமானவர்களுக்கு இரவு 8 மணிக்கு, 'எங்கே இருக்கிறீர்கள்?' என்று மனைவியிடமிருந்து போன் வரும். ஆனால் அனிருத்தின் வொர்க் அப் டைம் தான் இரவு 8 மணி. அவருக்கு திருமணமா, ஹிட் பாடல்களா என்று நான் யோசித்தேன். இறுதியில் ஹிட் பாடல்களையே தேர்வு செய்தேன்.
அமரன் படத்தை டிவில பார்த்துட்டு ஒரு வயதான அம்மா என்னை பார்க்க வந்தாங்க. 'உங்கள அப்படி பார்த்ததும் எங்களுக்கு தூக்கம் வரலன்னு' சொல்லி கையைத் தொட்டு பார்த்தாங்க. பிறகு அந்த அம்மாவோட ஹோம்ல இருக்கிறவங்க, அந்த மாதிரி கிளைமாக்ஸ் பண்ணாதீங்கன்னு' சொன்னாங்க. நம்ம வீட்டு பிள்ளைங்கிறது வெறும் டைட்டில் மட்டும் கிடையாது.
இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.