பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் | மதுரை மண்ணின் மைந்தன்... ‛சொக்கத்தங்கம்' விஜயகாந்த் பிறந்ததினம் இன்று | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் கல்யாணி பிரியதர்ஷினின் 2 படங்கள் | பிரேமலு நடிகருக்கு காய்ச்சல் : படப்பிடிப்பை ரத்து செய்த மோகன்லால் | இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா | ஒளிப்பதிவாளர் விரல் துண்டானது ஆனாலும், மறுநாளே வந்தார்: ஏ.ஆர்.முருகதாஸ் | ‛ஆட்டி' பெயர் சொல்லும் படமாக இருக்கும் : அபி |
மலையாளத் திரையுலகத்தில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் பிஜூ மேனன். 2020ல் வெளிவந்த 'அய்யப்பனும் கோஷியும்' படம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. தமிழில் 2005ல் வெளிவந்த 'மஜா' படத்தில் அறிமுகமானார். அதன்பின் 'ஜுன் ஆர், தம்பி, பழனி, அரசாங்கம், அலிபாபா, போர்க்களம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 'மதராஸி' படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், “ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், 'மதராஸி' படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி. எனது கதாபாத்திரத்தை அற்புதமாக அமைத்துள்ளார் அவர். நான் அனிருத்தின் பெரிய ரசிகன். சிவகார்த்திகேயனும் சிறப்பாக வளர்ந்துள்ளார். மலையாளத்திலும் தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது,” என்று பேசினார்.
பிஜூ பற்றி சிவகார்த்திகேயன் பேசுகையில், “பிஜூ மேனன் சாரின் ரசிகன் நான். குறிப்பாக 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பானது. குரலை எப்படி ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடிப்பது என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்,” எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.