''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு |

கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியவர் தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் துவங்கி உள்ளன. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், கூலி படம் எல்சியு படம் என்றும், விக்ரம் படத்தில் நடித்த கமல்ஹாசன் இதில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேட்கப்பட்டகேள்விக்கு அவர் பதிலளிக்கையில், விக்ரம் படம் எப்படி கமலுக்காகவே உருவாக்கப்பட்டதோ அதேபோல்தான் இந்த கூலி படத்தின் கதையும் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டது. அதனால் அந்த படத்தின் கேரக்டர் இந்த படத்திலோ அல்லது இந்த படத்தின் கேரக்டர் அந்த படத்திலோ இடம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. கூலி படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உண்மையில்லை என்கிறார் லோகேஷ் கனகராஜ்.




