தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சிக்கிட்டு, மோனிகா என்ற இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மோனிகா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக இந்த மோனிகா பாடலில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து 300 டான்ஸர்கள் நடனம் ஆடியுள்ளார். அந்த அளவுக்கு இந்த பாடல் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் பெரிய ஹிட் அடித்தாலும் தற்போது மோனிகா பாடல் அதையும் தாண்டி ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்தப்பாடல் கடந்துள்ளது. இந்த நிலையில் கூலி படத்தின் மூன்றாவது பாடல் வருகிற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன்பிறகு இம்மாதம் இறுதியில் இசை வெளியிட்டு விழா நடைபெற உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில், அதாவது ஆக., 2ல் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.