பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

லியோ ஜான் பால் இயக்கத்தில் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‛மார்கன்'. இந்த படத்துக்கு வெற்றி விழா, நன்றி அறிவிப்பு விழா நடத்திவிட்டார் விஜய் ஆண்டனி. அடுத்து சக்தி திருமகன் படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து ‛பிச்சைக்காரன் 3' உள்ளிட்ட படங்களில் நடிக்கப்போகிறார். இப்போது சக்தி திருமகன் படத்தை புகழ்ந்து வருகிறார். அருவி, வாழ் போன்ற அழகான படத்தை கொடுத்த அருண் பிரபு இந்த படத்தை இயக்குகிறார். அந்த படத்தின் கதை அருமை என்கிறார்.
இந்த படங்கள் தவிர, சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த வள்ளி மயில், காக்கி ஆகிய படங்களும் அப்படியே இருக்கிறது. சக்தி திருமகன் படம் அரசியல் கலந்த ஆக் ஷன் கதை என்று கூறப்படுகிறது. இந்தியளவில் நடந்த ஒரு பெரிய ஊழலை தழுவி எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள். படத்தை அவரே தயாரித்து இருக்கிறார். மார்கன் படத்தை பொறுத்த வரையில் தியேட்டர்களில் சுமாராக ஓடினாலும், தயாரிப்பாளராக விஜய் ஆண்டனிக்கு நல்ல லாபம். அவர் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.