துாக்கம் இல்லாமல் தவிக்கும் ஸ்டார்கள் | பெரிய பட்ஜெட் படங்களை தவிர்க்கும் கமல்ஹாசன் | 'யாதும் அறியான்' ஆடியோ உரிமையை கைப்பற்றிய சரிகம | டிரண்டிங்: ரீல் வீடியோவால் சீரழியும் தம்பதிகளின் கதை | 'கூலி'க்காக ஆடிய டி.ராஜேந்தர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மாதவன் படம் | தமிழில் 'எப் 1': நாளை வெளிவருகிறது | பிளாஷ்பேக்: மார்க்கெட் இழந்ததால் வெளிவராத விஜயன் படம் | பிளாஷ்பேக்: சரஸ்வதி சபதம் உருவாக காரணமான 'கலாவதி' | கூலி படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு |
'செந்தூரா' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கோபி இயக்கியுள்ள படம் 'யாதும் அறியான்'. நடிகர் தினேஷ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். பிரேக்கிங் பாயின்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அப்புகுட்டி, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கொல்லிமலையில் இருக்கும் ஒரு பழைய பங்களாவிற்கு சென்ற நண்பர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி சைக்கோ திரில்லர் ஜானரில் இப்படத்தை கோபி படமாக்கியுள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த வார இறுதியில் இந்த படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. படத்தை ஜூலை மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.