50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு |
அறிமுக இயக்குனர் கோபி இயக்கத்தில் சைக்கோ திரில்லர் கதையாக உருவாகியுள்ள படம் ‛யாதும் அறியான்'. நடிகர் தினேஷ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். பிரேக்கிங் பாயின்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நாயகியாக பிரானா நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, தம்பி ராமையா, விஜய் 'டிவி' கே.பி.ஒய் ஆனந்தபாண்டி, ஷியாமல், ஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொல்லிமலையில் இருக்கும் ஒரு பழைய பங்களாவிற்கு சென்ற நண்பர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி சைக்கோ திரில்லர் ஜானரில் இப்படத்தை கோபி படமாக்கியுள்ளார். இவர், ஏற்கனவே 'தி பிளைண்ட் டைரக்டர்' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இது சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது.
படத்தில் தொழில் நுட்பக்குழுவில் உதவி இயக்குனராக ராஜகுமாரி மற்றும் ஒளிப்பதிவை எல்.டி.,யும், இசையை தர்மபிரகாசும் அமைத்துள்ளனர். நெல்லை லெனின் கலை இயக்குனராக, எஸ்.கே.சித்திக் பாடல்கள் எழுத, படத்தின் பி.ஆர்.ஓ.,வாக தர்மதுரை, சுரேஷ் செயல்பட்டுள்ளனர்.
![]() |