சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, அவரது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள படம் 'ஹரி ஹர வீரமல்லு'. ஆந்திர மாநிலத்தில் நவாப்களை எதிர்த்து போரிட்ட ஒரு மாவீரனின் கதை. அந்த மாவீரனாக பவன் கல்யாண் நடித்துள்ளார். அவரது ஜோடியாக நிதி அகர்வால் நடித்தார்.
16ம் நூற்றாண்டு முகலாயக் கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படம், தெலுங்கு மண்ணின் வீரம் நிரம்பிய ஒரு சக்திவாய்ந்த கதையை பதிவு செய்கிறது. பவன் கல்யாண் இந்தப் படத்தில் துணிச்சலும், புரட்சியும் நிறைந்த ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பாபி தியோல், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்ஸா மற்றும் ஞானசேகர் ஆகியோர் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளனர்.
ஏ.எம்.ரத்தினத்துடன் இணைந்து மெகா சூர்யா ப்ரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஏ.தயாகர் ராவ் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் இது. இடையில் கொரோனா, பவன் கல்யாணின் அரசியல் பயணம், தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்னைகள், ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பு என பல பிரச்னைகளில் சிக்கி இதன் வெளியீடு தள்ளிப்போடப்பட்டே வந்தது. இந்த நிலையில் படம் வருகிற ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.