அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் |

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது 'டெவிலன்' என்ற படம் 48 மணி நேரத்தில் தயாராகி உள்ளது. இதை சீகர் பிக்சர்ஸ் சார்பில் பி. கமலக்குமாரி மற்றும் ந. ராஜ்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
தயாரிப்பாளர் ராஜ்குமாரே நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கார்த்திகா, இந்திரா, பிரட்ரிக், பாலாஜி, தோர்தி கிர் மற்றும் சில புதிய முகங்கள் நடித்துள்ளனர். மொத்தம் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை எழுதல், படப்பிடிப்பு, தொகுப்பு, ஒலி, பின்னணி இசை, கலரிங், சப்டைட்டில், மாஸ்டரிங், திரையிடல் உள்ளிட்ட அனைத்து படைப்பணிகளும் முடிக்கப்பட்டன.
இந்த சாதனைக்கு நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பிகாய் அருண் கூறியதாவது: ஒரு வீட்டுக்குள் படமாக்கப்பட்ட மன அழுத்தம், பயம், ஏமாற்றம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்ட மனோதத்துவ திகில் திரைப்படம் ஆகும். டெவிலன் இயக்கிய அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இது வேகத்தில் மட்டுமல்ல, கதையின் தரத்தையும் பிரதிபலிக்கிறது. நாங்கள் ஒவ்வொரு நொடிக்கும் தீவிர உழைப்புடன் செயல்பட்டோம்” என்றார்.