தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
சின்னத் திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஶ்ரீ. அதன் பின்னர் 'வழக்கு எண் 18/9', 'மாநகரம்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'வில் அம்பு' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான நடிகராக மாறினார். கடைசியாக 2023ம் ஆண்டில் வெளியான 'இறுகப்பற்று' படத்தில் ஸ்ரீ நடித்திருந்தார்.
சமீபத்தில் நடிகர் ஶ்ரீயின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது. அந்தப் புகைப்படத்தில் முடியின் நிறத்தை மாற்றி, உடல் மெலிந்து காணப்பட்டார்.
இந்த நிலையில், நடிகர் ஶ்ரீ, 'MAY EYE COME IN?' என்கிற ஆங்கில நாவலை எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, "18 ஜூன் 2025, புதன்கிழமை எனது முதல் ஆங்கில நாவலான "MAY EYE COME IN?"-ஐ உலகிற்குப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. "AMAZON.IN"- தளத்தில் உள்ளது. உங்கள் பிரதிகளை இப்போதே பெறுங்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.