நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
இந்தவாரம் வெள்ளிக்கிழமை (20ம் தேதி) அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ', தனுஷ் நடிக்கும் 'குபேரா', காமெடி படமான 'சென்னை சிட்டி ஆப் கேங்கர்ஸ்' ஆகிய 3 படங்கள் மட்டுமே வெளிவருகிறது. இந்த படங்களுக்கு இடையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் அனிமேஷன் படமான 'எலியோ' வெளியாகிறது. 'இன்சைட் அவுட் 2' படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து தயாரித்துள்ள படம் 'எலியோ' .
எலியோ விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவனுக்கு எதிர்பாராத விதமாக அண்டங்கள் முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. வித்தியாசமான கிரகங்கள், வினோதமான உயிரினங்களை சந்திக்கிறான். கூடவே இந்த பிரபஞ்சத்துக்கு ஏற்படும் ஒரு ஆபத்தையும் தடுத்து நிறுத்துகிறான். இதுதான் இந்த படத்தின் கதை. மடலின் ஷரபியன், டோமீ, ஏட்ரியன் மோலினா இயக்கியுள்ளார்கள்.
வருகிற 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் பார்க்கலாம்.