கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல |
நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர்சி கூறியதே இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். விஜய் முழு கதையையும் கேட்டுவிட்டு தான் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வார். அதனால் முன்னணி இயக்குனர்கள் கூட முழு கதையையும் தயார் செய்து வைத்துக் கொண்டு தான் விஜய்யிடம் செல்வார்கள். விஜய்யை யோஹான் அத்தியாயம் 1 படத்திற்கு கௌதம் மேனன் புக் செய்தாலும் அவர் கதையை சொல்லாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். படமும் கைவிடப்பட்டது. இந்நிலையில் சுந்தர் சி. தனக்கு கோர்வையாக கதை சொல்ல வராது என்றும், அதனால் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து குஷ்பு டுவிட்டரில் கூறியிருப்பதாவது, எங்கேயோ, ஏதோ குழப்பம். விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர் கூறியதே இல்லை. இருவருமே கடின உழைப்பாளிகள் என்று தெரிவித்துள்ளார்.