திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'தக் லைப்' படத்தின் திரைக்கதையை, மணிரத்னம், படத்தின் நாயகன் கமல்ஹாசன் இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை குறித்தும், திரைக்கதை குறித்தும் சில கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தன.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வெளிவந்த சில படங்களின் சாயல் படத்தில் இருந்ததாகவும் கூட சிலர் விமர்சித்திருந்தார்கள். 'நாயகன்' படத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் இடைவெளியில் கூட்டணி சேர்ந்தவர்கள் அந்தப் படம் போல இல்லை என்றாலும் அதற்கு நெருக்கமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கலாம் என்ற உணர்வு பலருக்கும் இருந்தது.
இதனிடையே, இந்தப் படத்தில் இடம் பெற்ற இடைவேளைக்கு முந்தைய சில காட்சிகளும், பிந்தைய சில காட்சிகளும் என்.கணேசன் என்பவர் எழுதிய 'அமானுஷ்யன்' என்ற நாவலில் இடம் பெற்ற ஆரம்ப அத்தியாயங்கள் போல இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். அவர்கள் சொன்னது சரியா என அந்த நாவலைத் தேடிப் பிடித்து ஆரம்ப அத்தியாயங்களை மட்டும் படித்தால் அவற்றை அப்படியே படத்தில் காட்சிகளாக வைத்திருக்கிறார்கள். நாவலில் இருக்கும் வசனம் படத்தில் குறைக்கப்பட்டு விஷுவலாகக் காட்டப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்கள் போன பிறகோ அல்லது இந்த செய்தியைப் படித்த பிறகோ இன்னும் சிலர் அது போன்ற 'தழுவல், காப்பி' விஷயங்களைப் பேச வாய்ப்புண்டு.