தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கமல்ஹாசனும், மணிரத்னமும் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த படம் 'தக்லைப்'. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தை மெகா ஹிட் படம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனுடன், சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்களை நடிக்க வைத்தார் மணிரத்னம். என்றாலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தக்லைப் படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக முதல் நாளில் இருந்தே அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாக தொடங்கின.
அதனால் இந்திய அளவில் முதல் நாளில் 17 கோடி வசூலித்த இப்படம், இரண்டாவது நாளில் 7.15 கோடியும், மூன்றாவது நாளில் 7.75 கோடியும், நான்காவது நாளில் 6.5 கோடியும் வசூலித்த நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் 3.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்த படம் 40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இது இந்தியன்- 2 படத்தை விட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்தமான வசூல் காரணமாகவே இதுவரை தக்லைப் படக்குழு அப்படத்தின் வசூல் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்கள்.