சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன் | எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் |

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் பூர்ணிமா பாக்யராஜ், அவர் மகன் சாந்தனு ஆகியோர் சந்தித்து பேசியிருக்கின்றனர். அடுத்தடுத்து இரண்டு பெரிய நடிகர்களை அம்மாவும், மகனும் சந்திக்க என்ன காரணம் என்று விசாரித்தால் இயக்குனர் கே. பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதை முன்னிட்டு அவருக்கு பெரிய பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி, கமல் இல்லாமல் தமிழ் சினிமாவில் பாராட்டு விழாவா? தவிர, பாக்யராஜ், பூர்ணிமாவுடன் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த நட்பின் அடிப்பையில் நேரில் போய் அழைப்பு விடுத்ததாக தகவல்.
அந்த விழாவில் பாக்யராஜ் டீமில் பணியாற்றவர்கள், அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், அவரின் நண்பர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தவுடன் இன்னும் சில மாதங்களில் அந்த பாராட்டு விழா நடக்க உள்ளது. பாக்யராஜ் நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' 1979ல் வெளியானது. ஆனால், '16 வயதினிலே' காலத்திலேயே இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக அவர் வேலை செய்து இருக்கிறார் பாக்யராஜ். அதற்கு முன்பும் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து இருக்கிறார். அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டை தொட்டுவிட்டார்.