ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த தக்லைப் படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழக அரசு சிறப்பு அனுமதி அளித்ததால் தமிழகத்தில் பல இடங்களில் காலை 9 மணிக்கு முதல்காட்சி தொடங்கியது. சென்னையில் நடக்கும் முதல்காட்சியில் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்த பிரபலங்கள் பங்குபெறுவது, படம் முடிந்த பின் பேட்டி கொடுப்பது வழக்கம். ஆனால், தக்லைப் படத்தை இன்று காலை எந்த தியேட்டரிலும் கமல், மணிரத்னம், திரிஷா ஆகியோர் பார்த்ததாக தெரியவில்லை.
சிம்பு நேற்று இரவே வெளிநாடு சென்றுவிட்டார். மற்ற படக்குழுவினரும் படம் பார்த்ததாக தெரியவில்லை கர்நாடக சர்ச்சை காரணமாக, முதல் ஷோவுக்கு படக்குழு வரவில்லை. அவர்கள் ஏதாவது பேசினால் வில்லங்கம் ஆகிவிடும். படத்துக்கு மைனஸ் என்று கருதியதால் வரவில்லை என்று கூறப்படுகிறது. தக் லைப் பட முதல் முன்னோட்டத்தில் கமலின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று இருந்தது. ஆனால் படத்தில் ஜாதி பெயர் இல்லை. பல இடங்களில் தனது பெயரை கமல்ஹாசன் சொல்கிறார். அதில் எதிலும் இல்லை. படக்குழு நீக்கியதா? சென்சார் நீக்கியதா என தெரியவில்லை.