இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் | ''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் |

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் 2002ம் திருமணம் செய்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 2021ம் ஆண்டில் இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இருவரும் நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்தும் பெற்றனர். இருவரும் அவரவர் பணியில் உள்ளனர். மகன்கள் அப்பா, அம்மா இருவரிடமும் வளர்கின்றனர்.
இந்நிலையில் இவர்களின் மூத்த மகன் யாத்ரா, சென்னையில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்து வருகிறார். அவரின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதற்காக தனுஷ், ஐஸ்வர்யா ஒன்றாக கலந்து கொண்டு மகனை வாழ்த்தினர். இந்த போட்டோவை தனுஷ் அவரது வலைதளத்தில் பகிர்ந்து, ‛‛பெருமைமிக்க பெற்றோர்'' என குறிப்பிட்டுள்ளார். விவாகரத்துக்கு பின் தங்களது மகனின் பள்ளி விழாவின் மூலம் மீண்டும் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டது வலைதளங்களில் வைரலானது.
இதனிடையே ரஜினி தனது எக்ஸ் தளத்தில் இந்த போட்டோவை பகிர்ந்து, ‛‛என் அன்பான பேரன் முதல் மைல்கல்லை கடந்துவிட்டான். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா'' என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.




