ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

மூக்குத்தி அம்மன்-2, டாக்சிக், ராக்காயி, டியர் ஸ்டூடன்ட்ஸ், சிரஞ்சீவி 157வது படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படி பிசியாக நடித்த வந்தபோதும் ஓய்வு கிடைக்கும்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்களுடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் நயன்தாரா. அந்த வகையில் தற்போது நயன்தாரா தனது குடும்பத்துடன் நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அந்த நாட்டின் பல பகுதிகளுக்கு தாங்கள் மகன்களுடன் நடந்து சென்றபோது எடுத்த புகைப்படம், வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.