நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் சந்தானத்தின் நண்பர் நடிகர் கூல் சுரேஷ். பல படங்களில் காமெடி கலந்த வேடங்களில் நடித்து வருகிறார். பல சினிமா மேடைகளில் படத்தை பிரபலப்படுத்த ஏதாவது காமெடியாக பேசுவார். சென்னையில் நடந்த அனல் மழை என்ற பட விழாவில், வழக்கத்துக்கு மாறாக அவர் கண்ணீர் விட்டார். அந்த படத்துக்காக அல்ல. சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம், கோவிந்தா பாடல் சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. அந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு.
அதுகுறித்து பேசிய கூல் சுரேஷ், ‛‛என் நண்பன் சந்தானம் கடவுள் பக்தி உடையவர். அவர் காரில் அவ்வளவு சாமி படங்கள், வேப்பிலை இருக்கும். அவர் கோவிந்தா பாடலை அவமதிக்கமாட்டார். ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் அந்த பாடலை எதிர்க்கிறார்கள். திருப்பதிக்குள் தமிழர்களை விடமாட்டோம் என்கிறார்கள். அது தவறு. திருப்பதி பெருமாள் படத்தை வீட்டில் வைத்து கூட கும்பிடுவோம். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் ஒரு நடிகர்தான். அவருக்கு சினிமா கஷ்டம் தெரியும்.
இந்த படத்தை அவர், அவர் தரப்பு பார்த்துவிட்டு பேச வேண்டும். ஏதாவது குறைகள் இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். என் நண்பன் சந்தானம் படத்துக்கு பிரச்னைகள் வர வேண்டாம். அது நல்ல படியாக ரிலீஸ் ஆக வேண்டும். பவன் கல்யாண் அவர்களே உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என மேடையில் விழுந்து வணங்கினார் கூல் சுரேஷ். பேசும்போது பல இடங்களில் கண் கலங்கினார்.