‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி |
தமிழ் சினிமாவில் தற்போது வரும் சில படங்களில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெறுவது ஒரு 'பேஷன்' ஆகிவிட்டது. அப்படி இடம் பெறும் அந்தப் பாடல்கள், படத்திற்கான இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்களை 'ஓவர்டேக்' செய்து ரசிக்க வைப்பதும் நடந்து விடுகிறது.
நேற்று வெளியான 'ரெட்ரோ' படத்தில் அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் 'கன்னிமா' பாடல் வெளியீட்டிற்கு முன்பே ஹிட்டாகியது. அந்தப் பாடலை வைத்து நிறைய ரீல்ஸ்களும் வெளிவந்தன. ஆனால், நேற்று படத்தைப் பார்த்த போது அந்தப் பாடலை தொடர்ச்சியாக முழுமையாக இடம் பெற வைக்காமல் பாடலை துண்டு துண்டாக்கி, இடையில் சில முக்கியமான காட்சிகளை இணைத்ததால் பாடலின் தாக்கம் குறைந்து போய்விட்டது.
அதே சமயத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே இடம் பெற்ற இளையராஜாவின் பாடல் வந்தபோது அது வேறொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 1980ல் மகேந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா நடித்து வெளிந்த 'ஜானி' படத்தில் இடம் பெற்ற 'செனோரீட்டா' பாடலைத்தான் 'ரெட்ரோ' படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
'ஜானி' படத்தில் இரண்டு ரஜினியில் ஒரு ரஜினி தொங்கு மீசை வைத்திருப்பார். அது போலவே 'ரெட்ரோ' படத்தில் சூர்யாவும் தொங்கு மீசைதான் வைத்திருக்கிறார். அதனால், 'ஜானி' பாடலை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தேர்வு செய்திருக்கலாம். சூர்யாவும், பூஜா ஹெக்டேவும் இடம் பெற்றுள்ள அந்தப் பாடல் படத்தில் தனித்துவமாகத் தெரிகிறது. படத்தின் கதையே அந்தக் காலக் கதை என்பதால் சிச்சுவேஷனுக்குப் பொருத்தமாக இருக்கிறது.
சமீபத்தில் அஜித் நடித்து வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் இடம் பெற்றது 'காப்பிரைட்' சர்ச்சையை ஏற்படுத்தியது. 'ரெட்ரோ' படத்தில் இளையராஜாவின் பாடல் இடம் பெறுகிறது என்பதை படக்குழுவினர் ரிலீஸ் வரை சொல்லவில்லை. இப்போது ரசிகர்களுக்குத் தெரிந்துவிட்டது. எந்த சர்ச்சையும் இதற்கு எழாமல் இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.
இளையராஜா சிம்பொனி இசையமைத்து திரும்பியபின், அவரை சிவகுமார், சூர்யா சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது 'ரெட்ரோ' படத்தில் அவரது 'ஜானி' பாடலைப் பயன்படுத்த அனுமதித்ததற்கும் சேர்த்து நன்றி தெரிவித்திருக்க வாய்ப்புள்ளது.