பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித் ரசிகர்களுக்குப் படம் பிடித்துப் போனது. அதனால், அஜித் நடித்து வெளியான படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்பு அந்த சாதனையைத் தக்க வைத்திருந்த படம் 'விஸ்வாசம்'. தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் வசூல் 230 கோடியைக் கடந்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 130 கோடி வசூல் கடந்திருக்கலாம் என்கிறார்கள்.
இவ்வளவு வசூல் என்றாலும் வியாபாரத்தின் அடிப்படையில் படத்திற்கான 'பிரேக் ஈவன்' இன்னும் நடைபெறவில்லை என்ற ஒரு தகவலும் கோலிவுட் வட்டாரங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மே 1ம் தேதி வரை பெரிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்த வார இறுதியிலும் 'குட் பேட் அக்லி'க்கான வசூல் திருப்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய லாபம் இல்லை என்றாலும் மிதமான லாபத்துடன் படத்தின் ஓட்டம் நிறைவடையும் என்கிறார்கள்.