ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் தனது முதல் படத்திலேயே அழுத்தமான தடத்தைப் பதிவு செய்தவர் சசிகுமார். இயக்குனர், நடிகராக அவர் அறிமுகமான அந்தப் படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்பின் 'ஈசன்' படத்தை மட்டும் அவர் இயக்கினார். அந்தப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு படத்தையும் அவர் இயக்கவில்லை. நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
கமர்ஷியல் படங்களிலும், மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்துள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படம் அடுத்த வாரம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. அப்படம் தவிர இன்னும் நான்கைந்து படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் அவர் உள்ளாராம். சரித்திர கால படம் ஒன்றிற்கான கதை, திரைக்கதை பணிகளை முடித்துள்ள சசிகுமார், அதில் முன்னணி நடிகர்கள் நடிக்கவும் வாய்ப்புள்ளதாம்.
விரைவில் அந்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்கிறார்கள்.




